உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸில் குண்டு வெடிப்பு – 13 பேர் காயம்


பிரான்ஸின் லியோன் நகர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உட்பட குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான வகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் சம்மந்தப்பட்டிருக்கலாமா என்கிற கோணத்தில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ற பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர்; சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேக நபர் ஒருவரின் ஒளிப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.ரி.வி. ஆதாரத்தை கொண்டு குறித்த ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#france #பிரான்ஸில்  #குண்டு வெடிப்பு  #காயம் #Lyon explosion

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.