வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது என்ற போதிலும் காங்கிரஸ் கட்சி எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ரேபரேலி பாராளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய தோல்விக்குப் பின் சோனியா காந்த நேற்றையதினம் தனது தொகுதி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தன்னை மீண்டும் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்தமைக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சோனியா நம்பிக்கையோடு காங்கிரஸ் கட்சி எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மெலும் இந்தப் போராட்டம் எத்தனை காலம் தொடர்ந்தாலும், காங்கிரசின் பாரம்பரிய குணத்தோடு இந்த நாட்டின் அடிப்படை மதிப்பீடுகளை, மாண்புகளைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய தான் தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.