இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அதனால், அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஊரடங்குச் சட்டம் ரத்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகி உள்ளதாகவும் குறிப்பாக இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு செல்லும் இந்தியர்கள், கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பன்தொட்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களையோ எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.