அமெரிக்காவில் 8 மில்லியன் டொலர்கள் மோசடி செய்த போலி சவூதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சவூதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்களாக மேற்கொண்ட 48 வயதான அன்டனி ஜிக்நாக் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில் தனக்குத்தானே ஒரு ராஜாங்கம் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காரில் போலி தூதரக ரீதியிலான லைசென்ஸ் பிளேட் பொருத்தி, செல்லும் இடமெல்லாம் தான் சவூதி இளவரசர் எனத் தெரிவித்து வந்ததனை நம்பி அவரது வங்கிக்கணக்கில் 8 மில்லியன் டொலர்கள் வைப்புச் செய்து ஏமாந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையறிந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#அமெரிக்கா #போலி #சவூதி இளவரசருக்கு #சிறை தண்டனை #டொலர்கள்