222
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் போசாக்கு சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன் தலைமையில் குறித்த சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 09 மணி 11 மணிவரையில் நடைபெறவுள்ளது. அதில் தாய் – சேய் போசாக்கு குறைபாடுகள் , நிறை போன்றவை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு , அவர்களுக்கான சிகிச்சைகள் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டது. #பருத்தித்துறைஆதாரவைத்தியசாலை #போசாக்குசிகிச்சைப்பிரிவு
Spread the love