இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இந்தியப் பிரதமர் மோடியை தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிர்கிஸ்தானில் ஜூன் 13,14 திகதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ள நிலையிலே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாலக்கோட் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் தனது வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் வான் வழியாக கிர்கிஸ்தான் சென்றால் பயணம் குறுகிய நேரத்தில் பயணம் முடிந்துவிடும் என்னும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை , பாகிஸ்தான் வான் வழியாக மோடி பயணிக்கும் விமானம் செல்வதற் அனுமதி ; வேண்டுகோள் கோரியிருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வழியாகப் பயணிக்க அனுமதித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#பாகிஸ்தான் #வான்வெளி #மோடி #அனுமதி,