முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இம்மூவருக்கெதிராக முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, காவல்துறை தலைமையகத்தில் விசேட காவல்துறைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#ரிஷாட் பதியூதீன் #ஹிஸ்புல்லா #அசாத் சாலி #முறைப்பாடுகள்