151
தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தை அரச சார்பற்ற பல்வேறு அமைப்புகளுடன் மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் பங்கெடுத்துள்ளது.#சத்தியாகிரகப்போராட்டம் #முஸ்லிம்பிரதிநிதிகள் #கல்முனை #தமிழ்பிரதேசசெயலகம்
பாறுக் ஷிஹான்
Spread the love