சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல்வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு முகிலன் அனுப்பப்பட்டார் என சிபிசிஐடி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தநிலையில், இது ஒரு பொய் குற்றச்சாட்டு என முகிலனின் மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 2019ல் காணாமல் போன முகிலன் திருப்பதி புகையிரத நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டதை அடுத்து, அவரை சென்னைக்கு கொண்டுவந்த தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து முகிலனை தமிழக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #முகிலன் #பாலியல்வன்கொடுமை #முறைப்பாடு #பொய் #குற்றச்சாட்டு