164
தஜிகிஸ்தான் நாட்டில் பழுதடைந்த உணவினை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சில சிறைச்சாலைகளிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு 128 கைதிகளை மாற்றும் பணி இடம்பெற்ற போது அதற்காக வெளியே வந்த கைதிகள் 16 பேருக்கு வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளது.
அவர்களுக்கு மருத்துவசதிகள் வழங்கப்பட்ட போதிலும் 14 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்தமை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #tajikistan #தஜிகிஸ்தான் #பழுதடைந்த #கைதிகள் #பலி
Spread the love