ஈழத்தின் தான் தோன்றீஸ்வரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்துள்ளது. இந்த வேட்டை திருவிழாவில் வாகை குழைகளை அணிந்து வேடுவர் வேடம் தரித்து ஆயிரக்கணக்கான அடியவர்கள் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
இலங்கையில் தானாக தோன்றிய ஆலயமான இந்த ஆலயத்தில் இடம்பெறும் மஹோற்சவத்தில் வேட்டைத்திருவிழா மிகவும் பிரசித்தமானது. எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாதவகையில் இங்கே வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.