Home இலங்கைநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்

by admin

யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று ஆலய தர்மகர்த்தா தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான சில செய்திகள் ஊடகங்களில் பரவிவரும் நிலையில், வழமைபோன்று திருவிழா இடம்பெறும் என்று ஆலய தர்மகர்த்தாவின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஒகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது. அத்துடன், 26ஆவது நாள் திருக்கல்யாண உற்சவமும் 27ஆம் நாள் வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #யாழ்ப்பாணம் #நல்லூர் கந்த சுவாமி #திருவிழா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More