பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெரமி ஹண்டை வென்று புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் பொரிஸ் ஜோன்சன் 92,153 வாக்குகள் பெற்றுள்ள அதேவேளை ஜெரமி ஹண்ட் 46, 656 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் – இன்று தெரியவரும்
23, 2019 @ 03:55
பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்னும் நிலையில் அதற்கான தேர்வுப் போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இதனையடுதடது உடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார். அதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பதையடுத்து புதிய பிரதமர் பதவி ஏற்பார்.
பொரிஸ் ஜோன்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதால் அவரே பிரித்தானியாவின் புதிய பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது #பிரித்தானியா #புதிய #பிரதமர் #பொரிஸ் ஜோன்சன் #ஜெரமி ஹண்ட்