Home இந்தியாபரோலில் நளினி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்

பரோலில் நளினி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்

by admin


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் வேலூர் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த நளினி , மகளின் திருமணத்திற்காக பரோலில் தற்போது வெளியே வந்துள்ளார். அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்த போதும் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது

அத்துடன் அவர் அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்க கூடாது எனவும் பேட்டியளிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்னர்.

10 நாட்களில் நளினியை பரோலில் விட வேண்டும் என நீதிமன்றம் விதித்த கெடு கடந்த 22ம் திகதியுடன் முடிந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களினால் அவர் தற்போதுதான் வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  #பரோல்  #நளினி  #சிறையிலிருந்து  #ராஜீவ்காந்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More