Home உலகம்பங்களாதேசில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய வதந்தியினையடுத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

பங்களாதேசில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய வதந்தியினையடுத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


பங்களாதேசில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய வததந்தியினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரர்கள் என சந்தேகப்பட்ட எட்டு பேரை மக்கள் கும்பலாக அடித்து கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமின்றி, இந்த வதந்தி தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட குழந்தை கடத்தல்காரர்கள் கிடையாது என்பதை அந்நாட்டு காவல்துறை உறுதி செய்துள்ளது. #பங்களாதேசில்  #குழந்தை #கடத்தல்காரர்கள் #வதந்தி #கொல்லப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More