Home இலங்கையாழ் காவற்துறை திணைக்கள ழுதுவினைஞர், ஜெகநாத குருக்கள் கிருபாலினி சடலமாக மீட்கப்பட்டார்…

யாழ் காவற்துறை திணைக்கள ழுதுவினைஞர், ஜெகநாத குருக்கள் கிருபாலினி சடலமாக மீட்கப்பட்டார்…

by admin


யாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து கைகள்ஈ கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளார். கழுத்தில் ”சோல்” ஒன்று சுற்றப்பட்டிருந்ததாகவும், இது கொலையா? தற்கொலையா என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை மீட்கப்பட்ட குறித்த சடலம், பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சுப்ரமணியம் மற்றும் சட்ட மருத்துவ நிபுணர் ஆகியோர் பார்வையிட்ட பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பூசகராக இருந்த அவரது கணவர் தற்போது அரச உத்தியோகத்தராக பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More