139
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் 6ஆம் திகதி முன்னிலையாகுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவுள்ளதாகவும், இன்றைய தினம் இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 6ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, அழைக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழுவின் தலைவர், ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
Spread the love