Home இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், அமைச்சர்களாக பதவியேற்பு

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், அமைச்சர்களாக பதவியேற்பு

by admin


அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிக் கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், தமது பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று இரவு 7 அமைச்சர்களில் 4 பேர் மீண்டும் தமது அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரே இவ்வாறு அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் ராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசல் காசிம், அலி சாஹிர் மௌலானா ஆகியோர் இன்று தமது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பையடுத்து தமது அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #முஸ்லிம்  #பாராளுமன்ற உறுப்பினர்கள்  #அமைச்சர்களாக #பதவியேற்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More