Home இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

by admin

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் ஏனைய நான்கு தேர்­கள், சப்­ப­ரம், திரு­மஞ்­சம், கைலா­ய­வா­க­னம் என்­ப­வற்­று­டன் முற்­று­மு­ழு­தாக அழிவடைந்தது.

இப்­பொ­ழுது முன்­பி­ருந்த முக ­உத்­தர தேரைவிட இன்­னும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாக தேர் இந்த ஆண்டு அமைத்து முடிக்கப்பட்டது. இந்தச் சிறப்பு வாய்ந்த மாபெ­ரும் முக உத்­தர தேரில் 29 வருடங்களின் பின்னர் ஆறுமுக பெருமான் தேரில் ஆரோகணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #மாவிட்டபுரம்  #கந்தசுவாமி கோவில் #தேர்த்திருவிழா #தேர்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More