முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்த விடயம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டியின் பிரதான சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபியின் சொத்துக்கள், அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மற்றும் சில வங்கிக் கணக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது வைத்தியர் ஷாபிக்கு எதிராக சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. #ஷாபி #சி.ஐ.டி #விசாரணைகளை #சொத்து #அரச சார்பற்ற நிறுவனம்