Home இலங்கைகெட்டபுலா பகுதியில்   தாழிறக்கம்  –   20 பேர் வெளியேற்றம்

கெட்டபுலா பகுதியில்   தாழிறக்கம்  –   20 பேர் வெளியேற்றம்

by admin

நாவலபிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றபட்டுள்ளதாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழிறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள் நாவலபிட்டி காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கபட்டது.

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தரின் ஊடாக கொத்மலை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ஜந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இவ்வாறு வெளியேற்றபட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் சுரங்கி பெரேரா தெரிவித்தார்.

  வெளியேற்றபட்ட மக்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் கொத்மலை ஒயா அமைக்கபட்ட காலபகுதியில் வெளியேற்றபட்டு குறித்த பகுதியில் குடியேற்றபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.  #கெட்டபுலா   #தாழிறக்கம்  #வெளியேற்றம்

(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More