Home பிரதான செய்திகள்ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு காலக்கெடு விதிப்பு

ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு காலக்கெடு விதிப்பு

by admin


இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் அவர் பதவி விலகுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் வெளியேறாவிட்டால் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் அல்லது வேறு பொறுப்பை வழங்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணியுடனான தொடரிற்கு முன்னர் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்போம் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ மூன்று தலைசிறந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹத்துருசிங்கவிற்கு மாதாந்தம் 40,000 டொலர்கள் வழங்கப்படுகின்றன இது மிகப்பெரும் தொகை என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை அணி விளையாடும் போட்டிகளில் 35 வீதத்தினையே வெல்கின்றது என்றால் இவ்வளவு பெரிய தொகை அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  #ஹதுருசிங்க #பயிற்சியாளர் ,#காலக்கெடு #ஹரீன் பெர்ணான்டோ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More