பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவின் பலமான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்று வரும், ஆசியான் அமைப்பின் 26ஆவது பிராந்திய மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், முக்கியமான அண்டை நாடும் பெறுமதிமிக்க நண்பனுமான இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பின்போது, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தமது பலமான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இருதரப்பு பேச்சுக்களில், தீவிரவாதத்துக்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு ஆதரவளிக்க தயார்….
150
Spread the love