உலகில் நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மக்கள்தொகைப் பெருக்கம், இறைச்சி உணவுப் பழக்கம் அதிகரிப்பு, தொழில் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இவ்வாறு நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகில் சுமார் 400 பகுதிகளில் உள்ள மக்கள், மிகவும் மோசமான தண்ணீர் பிரச்சனையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என வோஷிங்டனைச் சேர்ந்த உலக நீராதார நிலையம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் இடம்பெயர்வார்கள் டினவும் போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ முதல் சிலி வரையில், ஆ;பிரிக்கப் பகுதிகள் முதல் தெற்கு ஐரோப்பாவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வரை, மத்திய தரைக்கடல் பகுதியிலும் தண்ணீர் நெருக்கடி மோசமான நிலையை எட்டிக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதி பேர் அதாவது சுமார் 260 கோடி மக்கள் அதிகம் தண்ணீர்ப் பிரச்சனை உள்ள நாடுகளில் வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீராதாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக சுகாதாரம் முதல் பொருளாதார வளர்ச்சி வரை கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும்குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்து வரும் மோதல்களுக்கு தண்ணீர் பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் இஸ்ரேல், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகள் இதில் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டுள்ளது. #நீர் #ஆதாரங்களுக்கு #நெருக்கடி #உலகநீராதாரநிலையம்