Home இலங்கைகோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா? ரணிலிடம் கேள்வி…

கோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா? ரணிலிடம் கேள்வி…

by admin

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கோத்தாபய ராஜபக்ஸவிற்கு எதிராக களமிறக்கப்படும் வேட்பாளர், அவர்களுடன் இரகசிய தொடர்புகளைப் பேணுபவராக இருக்கக்கூடாது என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. நேற்று ஹோமாகவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அஹிம்சா விக்ரமதுங்க இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமது தந்தையான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் பிரதமர் இதன்போது மீண்டும் கருத்துத் தெரிவித்ததாக அஹிம்சா விக்ரமதுங்க தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ஸ தமது தந்தை உள்ளிட்டோரை கொலை செய்யதமைக்கு மன்னிப்புக் கோருவாரா என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், கோத்தாபய ராஜபக்ஸ ஒருபோதும் மன்னிப்புக்கோர மாட்டார் என அஹிம்சா விக்ரமதுங்க ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளவரை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா என அவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தமது தந்தை கொலையுண்ட தினத்திலிருந்து இன்று வரை வாக்கிற்காக அந்தக் கொலை பயன்படுத்தப்படுவதாக அஹிம்சா விக்ரமதுங்க தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More