யாழ்ப்பாணத்தில் மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ள மயிலிட்டி இறங்குதுறையை அண்டிய பகுதியில் பெரும் நிதிச் செலவில் சீரமைக்கப் பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை ரணில் விக்கிரமசிங்க நாளை திறந்து வைக்கவுள்ளார்.
போருக்கு முன்னர் இலங்கை மீன்பிடி உற்பத்தியில் மயிலிட்டித் துறைமுகம் 30 வீதத்துக்கு மேல் பங்களிப்புசெய்திருந்தது. துறைமுகத்தை அண்டியுள்ள மீனவர்களே அந்தப் பங்களிப்புக்கு காரணமாக இருந்தனர்.
போர் காரணமாக அங்குள்ள மீனவர்கள் இடம்பெயர்ந்தனர். துறைமுகமும் அழிவடைந்தது. இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் மயிலிட்டி கொண்டுவரப்பட்டது. போருக்குப் பின்னர் அந்தப் பகுதியில் சிறியளவு நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும், துறைமுகத்தை அண்டிய பகுதி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைமுகத்துக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் துரித அபிவிருத்தித் திட்டத்தில் அடிக்கல் நடப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா மயிலிட்டித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை இங்கிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீண்டும் இங்கு குடியமர்த்தப்படவேண்டும்
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாகக் கடந்த ஒரு வருட காலமாக அரசு கரிசனை கொண்டிருக்கவில்லை. அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போதும், அந்தப் பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் பேசியிருந்தார். படைத் தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணில் தெரிவித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.
தற்போது மயிலிட்டித் துறைமுகத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளை துறைமுகம் திறக்கப்படவுள்ளது. ஆனால் மக்களுடைய மீள்குடியமர்வு தொடர்பில் தொடர்ந்தும் ரணில் அரசு மௌனமாகவே உள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாளைய திறப்பு விழாவிலும் ரணிலிடம் இடித்துரைப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.