இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றினார்
இதேபோல் தமிழகத்தின் சென்னையில் உள்ள கோட்டைகொத்தளத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றதன்பின்னர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர்;கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோட்டையில் 3-வது முறையாக தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது. #இந்தியா #சுதந்திர தினம்