Home இலங்கைகிளிநொச்சியில் உல்லாசத்துறை வலயம்…

கிளிநொச்சியில் உல்லாசத்துறை வலயம்…

by admin


கிளிநொச்சி- பூநகரி நகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும் பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (15.08.19) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமா் கடந்த ஆட்சிக்காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் தமது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களும் நாம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More