249
யாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் வருடாந்தம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் “நல்லைக் கந்தன்” மலரின் 27 ஆவது இதழின் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்டும், சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி அ. எழிலரசியும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் வழங்கப்படும் “யாழ் விருது”, இவ்வருடம் , யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொன். பாலசுந்தரம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது. “நல்லைக் கந்தன்” இதழ் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும்#நல்லைக் கந்தன் #இதழ் #வெளியீடு #யாழ் #விருது #மாநகரசபை
– மயூரப்பிரியன்
Spread the love