சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் அதன் போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை கண்டறியப்பட்டன.
இந்நிலையில் நேற்றையதினம் சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது. மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும்.
சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளதுடன் அது பளபளப்பாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #சுடாத #மண்குவளை #கண்டெடுப்பு #கீழடி