இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது சகோதரர் ஹசித் அகமது ஆகியோருக்கு அலிப்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் 2018ஆம் ஆண்டு முகமது ஷமிக்கு எதிராக குடும்ப வன்முறை, பாலியல் முறைப்பாடு வழங்கியதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் அலிப்பூர் நீதிமன்றம், முகமது ஷமி 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் ஷமி இதை செய்யத்தவறினால், அவரை கைது செய்யலாம் எனவும் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னதாக ஷமி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் முறைப்பாடு வழங்கியிருந்த போதிலும் ; இந்திய கிரிக்டிகட் பேரவையின் விசாரணையில் ஷமி, எவ்வித ஆட்டநிர்ணயத்திலும் ஈடுபடவில்லை என உறுதி செய்யப்பட்டதனையடுத்து அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
தற்போது முகமது ஷமி இந்திய அணிக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுவருகின்ற நிலையிலேயே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது #முகமது ஷமி #பிடியாணை