உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் தினத்தில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அறிவிக்கும் தினத்தில் ஜனாதிபதி செயலத்தில் இந்த சந்திப்பை நடாத்த எதிர்ப்பார்ப்பதாக ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு கடந்த தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்து. குறித்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி விரும்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான திகதி ஒன்றை அறிவிப்பதாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.