Home இலங்கைகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்…

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்…

by admin

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸத் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More