நேற்று மாலை கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 17 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 14 ஆயிரத்து 225 கனஅடியும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடியுமாக மொத்தம் 17 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதனால் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது
இதற்கு முன்பு அதிகளவில் வெள்ளம் வந்ததால் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 10-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன் 38-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது #கர்நாடக #அணை #தண்ணீர் #திறப்பு