அமெரிக்க தலைநகர் வோஷிங்டனில் வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக் சென்றுள்ள காவல்துறையினர் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #வோஷிங்டனில் #துப்பாக்கிச்சூடு #காயம்
Spread the love
Add Comment