நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள 22 பாடசாலைகளில் 25 வீதமான மாணவர்கள் தொடர்ச்சியாக செல்வதில்லை எனவும் இவ்ஒழுங்கற்றமுறை இடம்பெற காரணம் விழிப்புணர்வற்ற பெற்றோர்களே என நாவிதன்வெளி உலக தரிசனம் நிறுவனத்தின் செயற்திட்ட இணைப்பாளர் ஏ.தனுராஜ் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரி பயிலுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை( 24) கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாணவர்கள் அண்மைக்காலமாக பாடசாலை இடைவிலகல் அதிகரித்து வருகின்றது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள 22 பாடசாலைகளில் 25 வீதமான மாணவர்கள் தொடர்ச்சியாக ஒழுங்குமுறை அற்று பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதில்லை அதற்கு காரணம் விழிப்புணர்வற்ற பெற்றோர்களே.அதனை மாற்றுவதற்கு மக்களோடு அதிக தொடர்புகளைப் பேணி வேணும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முயற்சிக்க வேண்டும் . இவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் 70 வீதமாகக் காணப்படும் கல்வி கல்வி அறிவு நமது முயற்சியினால் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் இவற்றுக்கு நாம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்