166
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகை வீழ்ச்சிடைந்துள்ளமை காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடுபூராகவும் உள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் ஆறு அம்சக்கோரிக்களை முன்வைத்து முப்பது ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்றும்(26) நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர்கள், ஆசிரியர்களின் சுகயீன போராட்டம் காரணமாக இம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பெரும்பான்மையான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு 75 வீதம் குறைந்திருந்தை காணமுடிந்தது. இதனைத்தொடந்து ஆசிரியர்களின் வருகைக்காக காத்திருந்த மாணவர்கள் பின்னர் வீடு திரும்பி சென்றனர். #ஆசிரியர்களின் #கல்விநடவடிக்கைகள் #பாதிப்பு #அம்பாறை
Spread the love