Home இலங்கை ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்

ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்

by admin


ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உடலில் விசம் கலந்தமையால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில இவ்வாறு யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினமும் 3 பெண் யானைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.  இந்தநிலையிலேயே இவ்வாறு இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் உயிரிழந்த யானைகளின் உடல்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #ஹபரணை  #வனப்பகுதி #தேடுதல் #யானை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More