முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நளை திங்கட்கிழமை (28.10.19) யாழ்ப்பணத்தில் நடாத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.
மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி நின்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸவின் யாழ்ப்பாண பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, தேசிய மக்ககள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் பிரசார நடவடிக்கைகளுக்கான வடக்கிற்குச் செல்லவுள்ளார்.
நாளை திங்கட்கிழமை முற்பகல் வவுனியாவில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ அதனையடுத்து நண்பகலில் யாழ்.இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ள பிரதான பிரசார கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
அதேநேரம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், நாகவிகாரை முக்கிய சில வணக்கஸ்தலங்களுக்கும் செல்லவுள்ளதாக அறிய முடிகின்றபோதும் கந்தளாயில் அன்றையதினம் பிற்பகலில் பிறிதொரு பிரசார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதால் அதற்கான கால அவகாசத்தினைப்பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். குறித்த தினமன்று யாழில் தனது பிரசார கூட்டத்தினை பிற்பகல் 3மணிக்கு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.