ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க இலங்கை சென்றுள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இதுவரை தமது ஆரம்ப கட்ட அறிக்கை தாயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பை மையப்படுத்தி அவர்கள் இந்த அறிக்கையை தாயாரித்து வருவதாகவும் அதில் பல்வேறு துறைகளை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 100 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்ணாணிப்பாளர்கள் இலங்கை செல்லவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவும் உள்நாட்டு கண்காணிப்பாளர்களின் ஊடாகவும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களில் நீண்டகால கண்காணிப்பு குழுக்கள் ஏற்கனவே நாட்டுக்கு வருகைதந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காகவும், தேர்தல் குறித்த ஆய்வுகளுக்காகவும் மேலும் பல வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை செல்லவுள்ளனர். அதற்கமைய குறுகிய கால வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நவம்பர் மாதம் 12 ஆம் அல்லது அதற்குள் இலங்கை செல்லவுள்ளனர். இவர்கள் தேர்தல் முடிவடைந்து சுமார் ஒரு மாதம் வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது.