இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க நீருக்கிடையில் வாழும் வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளால் ஆன இந்நகரில் தெருக்களே கால்வாய்களாகத்தான் அமைந்துள்ளது
நூற்றுக் கணக்கான பாலங்கள் இந்நகரின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கின்றன. இந்த சிறப்பியல்பாலும், அழகிய கட்டக் கலையாலும் உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வெனிஸ் நகரம் ஈர்க்கிறது
எனினுத் தற்போது வரலாறு காணாத வெள்ளத்தால் வெனிஸ் நகரின் புகழ் பெற்ற செயின்ட் மார்க் பேசிலிகா உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் கட்டங்களுக்கு உள்ளேயும் புகுந்துள்ளது. அதிகபட்சமாக வெனிஸ் நகரில் நீர் மட்டம் 1.87 மீற்றர் அளவுக்கு உயர்ந்துள்ளது என ஓரு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
1923 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒரே முறைதான் இந்த அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது எனவும் 1966ல் நடந்த அந்த நிகழ்வில் 1.94 மீற்றர்ர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த வெள்ளம், பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என ருவிட்டரில் தெரிவித்துள்ள வெனிஸ் நகர மேயர் லூய்கி புருக்னேரோ இதற்காகத் தரும் விலை அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். #இத்தாலி #புராதன #வெனிஸ் #வெள்ளம்