லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் கடந்தாண்டு நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (19) லண்டன்- வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் இந்த வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் இறுதி சாட்சியை விசாரணை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #பிரியங்கபெர்னாண்டோ #தீர்ப்பு #கொலைமிரட்டல்