இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூலம், இஸ்ரேலில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது வெளிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிடப்பட்ட சதி எனவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள நெட்டன்யாகூ தான் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். #இஸ்ரேல் #பிரதமர் #ஊழல் #பதவிவிலக #நெட்டன்யாகூ