சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனானைச் சேர்ந்த வணிகரான அப்துல்லா என்பவர் ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஓர் ஏலத்தில் ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜிகள் ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக தான் இவற்றினை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அப்துல்லா அதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சுவிற்ஸர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவரான அப்துல்லா ஐரோப்பாவில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர் ஏலம் எடுத்த பத்து பொருட்களில் ஹிட்லர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், சிகரெட் பெட்டி மற்றும் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்ப் உள்ளிட்டவையும் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது #ஹிட்லர் #தொப்பி #அப்துல்லா #ஏலத்தில் #இஸ்ரேல்