2019-11-29
ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் பொது அமைதி தொடர்பில் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்
ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் குறித்த விசாரணைகள் பற்றிய தகவல்களை பற்றி கேள்வி தொடுப்பதற்காக இரண்டு ஊடகவியலாளர்கள் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை மற்றும் தகவல்களை இலகுவாக அணுகுவதற்கு வழிசமைத்த பொலிஸ் ஊடகப் பிரிவை மூடிவிடல் தொடர்பில் இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் தனது கவலையை வெளிப்படுத்துகிறது.
எங்களுக்கு அறியக்கிடைத்ததன்படி, த லீடர் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் தனுஷ்க சஞ்சய மற்றும் வொயிஸ்டியூபின் ஊடகவியலாளர் துஷார விதாரன ஆகியோர் பொலிஸாரால் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம், ஊடகங்களுக்கான பொலிஸ் தகவல்களைப் பெறுவதற்கான மாற்றீட்டை அறிமுகப்படுத்தாமல் பொலிஸ் ஊடகப் பிரிவும் மூடப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொண்டுள்ள பொறுப்புகளை சுதந்திர ஊடக இயக்கம் புரிந்துகொள்கிறது. எவ்வாறாயினும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகவியலாளர்களும், பொது மக்களும் அறிந்துகொள்ள வேண்டியமை தொடர்பான உரிமை தடைபட்டுள்ளது என்பதை சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இச்சூழமைவானது அதிகார சபைகளால் ஊக்குவிக்கப்பட்ட ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் கொள்கைகளை மீறுகிறது.
எனவே, பொது அமைதி தொடர்பில் வெளிப்படைத்தன்மைக்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரைப் பொறுப்பேற்கச் செய்ய, உடனடியாக செயல்படுமாறு சுதந்திர ஊடக இயக்கம் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகள் குறித்த பொதுத் தகவல்களின் ஆதாரங்களை முறையாக மீண்டும் நிறுவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
சீ. தொடாவத்த
தலைவர் லசந்த டி சில்வா
செயலாளர்