நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வந்த அனைத்து தெரிவுக்குழுக்களும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜனவரி #நாடாளுமன்ற #ஆரம்பம் #கோத்தாபய