பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இன்று (09) தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அதற்கும் அப்பால் இராணுவத்துடனும் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடல்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கமைய பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஊடாக இந்த விடயம் சம்பந்தமாக தகவல்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.