163
பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (10.12.19) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, கடமையாற்றியிருந்தார்.
Spread the love