கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கம்பரேலியா திட்டத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை இந்த அரசாங்கம் கைவிடாது. தேசிய அபிவிருத்திகளான பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி , விமான நிலைய அபிவிருத்தி என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
சில அபிவிருத்தி திட்டங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றினை நிவர்த்தி செய்து அந்த அபிவிருத்தியை தொடந்து முன்னெடுப்போம். அதன் ஊடாக நிலையான அபிவிருத்தினை நோக்கி செல்வோம். என மேலும் தெரிவித்தார். #கம்பரேலியா #ஊழல்கள் #விசாரணை #ஆணைக்குழு #அங்கஜன்