Home இந்தியா குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – உ.பி.யில் இன்று 6 பேர் பலி

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – உ.பி.யில் இன்று 6 பேர் பலி

by admin

உத்தர பிரதேசம் மாநிலத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் பலியானதாக அம்மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் என பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் லக்னோவிலும் போராட்டங்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது  #குடியுரிமைசட்ட   #போராட்டம் #பலி  #வன்முறை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More